Thursday, August 4, 2011

Sri Siththanaikkuddy Swami

காரைதீவு ஸ்ரீ சித்தானைக் குட்டி சுவாமிகள் 'சித்தத்தில் உறைந்தவராம் சித்தானைக்குட்டி, எங்கள் சித்தமெல்லாம் நிறைந்தவராம் சித்தானைக்குட்டி'. இவ்வாறு பக்தர்களால் அன்போடு, பக்தியோடு, நம்பிக்கையோடு பாடித்துதிக்கப்படும், ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகள் கிழக்கு மாகாணத்தில் உள்ள காரைதீவில் 1951 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 21 ஆம் நாள் சுவாதி நட்சத்திர தினத்தன்று ஜீவ சமாதியானார். பாரத நாட்டின் இராமநாதபுரத்து சிற்றரசன் மகனாக அவதரித்த இம்மாபெரும் சித்தர் ஆடிய சித்துக்கள் எண்ணிலடங்கா. கதிர்காம திருவிழா காட்சியை தனது உள்ளங்கையில் காண்பித்த இம்மாகான் கதிர்காம காட்டில் வழிதப்பியவர்களுக்கு வழிகாட்டியுள்ளார். மேலும் சாண்டோ சங்கரதாசை பெரும் இரும்பரசனாக புகழ் பூக்கச் செய்தவரும், எமது சித்தானைக்குட்டிசுவாமிகளே! இவர் ஆடிய சித்துக்களில் குறிப்பிடத்தக்கவை: ஊமையை பேசவைத்தார். மாண்டபெண்ணை உயிர்ப்பித்தார், கடலில் அகப்பட்டவனை மீட்டார், மாட்டிறைச்சி மல்லிகைப் பூஆக்கினார். கடலின் மேலால் நடந்தார்.ஒரு முறை கல்முனை சந்தியில் நின்று கதிர்காமத்தில்தீப்பிடித்த திரை சேலையை அனைத்தார். அறுத்த மீனை பலா சுளையாக மாற்றினார்.
இவர் ஆடிய சித்து;ககள் இன்னும் பல பல...எமது காரைதீவு 2004 ஆம் ஆண்டு ஆழிப் பேரலையால் தாக்கப்பட்ட போதுசித்தானைக்ககுட்டி சமாதி கோயில் மட்டும் தப்பியது, மிக மிக அற்புதமானதொன்றாகும். ஜீவ சமாதி அடைந்த இந்த மாகான் இன்றும் அவரை சரணடைந்தவர்களை எத்தனையோ ஆபத்தானசூழ்நிலைகளில் இருந்து காத்து வருகின்றார், என பக்தர்களிடம் இருந்து பல்வேறு அனுபவங்களை கேள்விப்படுகின்றோம்.
ஆக்ஸ்ட் மாதம் 4 ஆம் திகதி சித்தானைக்குட்டி சுவாமிகளுக்கு திருவுருவ சிலை பிரதிஷ;ஸ்டை செய்யும் வைபவம் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள தென்னிந்திய பிரம்ம ரிசஷp மலை அன்னை சித்தர் ஸ்ரீ ராஜ் குமார் சுவாமிகள் வருகை தரவுள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி சித்தானைக்குட்டி சுவாமிகளது 60 ஆவது குருபூசை விழா நடைபெறும் என்பதையும் அறியத்தருகின்றோம்.